Monday, November 28, 2011

கலைஞன்

கலைஞர்களுக்கு  அகம்பாவம் அதிகமாகவே இருக்கும் . அகம்பாவம் அதிகமாக இருப்பதாலேயே ஒருவனால் கலைஞன் ஆக முடியாது !

Wednesday, October 13, 2010

குரு

குரு என்பவர் யார் ? கு என்றால் இருள் என்பது பொருள் . ரு என்பது ஒளியை குறிக்கிறது . நம் மனதில் இருக்கும் இருளை நீக்கி ஒளியை தருபவரே  குரு . எந்த ஒரு ஆத்ம ரீதியான விஷயங்களும் ஒரு குருவின் வழிகாட்டுதல் இன்றி முழுமை பெறுவது என்பது , எந்த ஒரு சாதாரணமான மனிதருக்கும் சாத்தியம் இல்லை . ஒரு குருவை தேர்ந்து எடுப்பது என்பது எப்படி? நமக்கு மிகவும் தெரிந்த ஒரு நபரின் குருவை நாமும் குருவாக ஏற்று கொள்வது என்பதோ , நம்மால் முடியாத ஒரு செயலை மற்றொருவர் செய்வதால் அவரையோ , மந்திர தந்திரங்கள் மூலம் நம்மை ஆட்கொள்ளும் நபர்களையோ குருவாக ஏற்று கொள்வது என்பது ஒரு வகையில் தற்கொலைக்கு சமம் என்றே கருதப்படுகிறது.  
நாம் அறியாமலே நம்மை நமக்கு அறிய வைப்பவர் குரு . ஒரு குருவானவர் எல்லாம் தெரிந்த நிலையிலும் தன்னை எளிமையாகவே வைத்துக் கொள்கிறார். உடல் , மனம் இரண்டுக்குமான எல்லா வித சந்தேகங்களுக்கும் ஒரு குருவால் மட்டுமே விளக்கமும் தந்து , அதை உணர வைக்கவும் முடிகிறது . எழுத்துச்சித்தர் பாலகுமாரன் குருவை பற்றிக் கூறும்போது, குரு தன்னை அறிந்தவராக இருக்கிறபொழுது உங்களுடைய தவிப்பை முற்றிலுமாய் உணர்ந்து உங்களை அறியாமல் உங்களை உங்களுக்குள் தள்ளுகின்ற ஆற்றலையும் பெற்றிருப்பார். அந்த ஆற்றல் மிக ரகசியமாய் உங்களில் பாய்ந்து உங்களுக்குள் உங்களை அறிவிக்கும். இது விஞ்ஞான பாடமல்ல. அடிப்படையாய் புரிந்து கொள்வதற்கும், பேசி தெரிந்துகொள்வதற்கும். தடித்த புத்தகங்களிலிருந்து கற்று கொள்வதற்குண்டான விஷயமுமல்ல. இது ரகசியமானது. ரகசியம் என்பதற்கு வேறு ஒருவருக்கு சொல்லக்கூடாது என்ற அர்த்தமில்லை. எப்படி உள்ளே வந்தது என்றே தெரியாத ரகசியம் இது. நீங்கள் எப்படி மாறினீர்கள் என்றே தெரியாத ரகசியம் இது. உங்களை அறியாது உங்களை மாற்றுவது என்பது தன்னை அறிந்த குருவால் வெகு நிச்சயம் இயலும் என்கிறார்.
                                             குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹா குரு சாக்ஷாத் பரம்ப்ர்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா...!

Thursday, October 7, 2010

சகாதேவன்

சகாதேவன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி . துரியோதனனும் சகுனியும் திட்டம் தீட்டி , பாண்டவர்களை சூதிலே வெல்லும் சூழ்ச்சியை செயல்படுத்த தொடங்கும் தருணம். தாங்கள் கட்டிஇருக்கும் புதிய மாளிகையை காண வரும்படி பாண்டவர்களுக்கு ஒரு ஓலையை தயார் செய்யும்படி சகுனி துரியோதனனுக்கு சொல்கிறான். அவனும் அதன்படி தயார் செய்த ஓலையில், கையெழுத்து இடும் வேளையில் அவன் கரங்களை தடுத்த சகுனி, உன் தந்தையை கையெழுத்திட சொல் . அதைத்தான் தர்மன் மதிப்பான் என்றும் , நம் ஆட்களிலேயே அவர்கள் அதிகம் மரியாதை வைத்திருப்பது விதுரனுக்குத்தான், எனவே அவனையே அந்த ஓலையை கொண்டு செல்ல சொல் என்றும் சூழ்ச்சிக்கான முதல் விதையை விதைக்கிறான். அதன்படி, விதுரர் கொண்டு வந்த ஓலையை படித்த தர்மன் , தன் தம்பிகளோடு கலந்து ஆலோசித்து வருவதாக கூறி முதலில் வீமனிடம் கருத்தினைக் கேட்க , அதற்க்கு வீமன் சொல்கிறான் ., அண்ணா , நண்பர்கள் தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்ள கூடாது ; பகைவர்கள் தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்ளாமல் இருக்க கூடாது : ஆரம்பம் முதலே நமக்கும் துரியோதனனுக்கும் இடையே பகைமை தான் இருக்கின்றது , எனவே மாளிகை காண செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றான். அடுத்து அர்ஜுனன் சொல்வது., அண்ணா, நாம் ஒருவரை சந்தேகப்பட்டால் நம்பக் கூடாது , நம்பினால் சந்தேகப் படக் கூடாது ; ஆரம்பம் முதலே நமக்கு துரியோதனன் மீது சந்தேகம் தானே ஒழிய , ஒரு போதும் நம்பிக்கை இருந்தது இல்லை. எனவே மாளிகை காண செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றான். அடுத்து நகுலன் ., என் முன்னவர் இருவர் கூறியதே என்னுடைய கருத்து என்ற பின் சகாதேவனிடம் வருகிறான் தர்மன் . சகாதேவன் யார் , முற்றும் உணர்ந்தவன்  , ஞானி ! சகாதேவன் தர்மனை கேட்கிறான்,
சகாதேவன்: அண்ணா, ஓலையை எழுதச் சொன்னது யார் ?
தர்மன்          : சகுனி
சகாதேவன்: ஓலையை எழுதி இருப்பது யார் ?
         தர்மன் : துரியோதனன்
சகாதேவன்: ஓலையில் கையெழுத்து இட்டிருப்பது யார்?
           தர்மன்: திருதிராஷ்டிரர்
சகாதேவன் : ஓலையை கொண்டு வந்திருப்பது யார்?
           தர்மன்: விதுரர்
  சகாதேவன் : இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் நீர் யார்?
             தர்மன்: உன் அண்ணனாகிய தர்மன்
 சகாதேவன்  : நீர் யாரிடத்தில் இந்தக் கேள்வியை கேட்டு கொண்டு இருக்கிறீர் ?
            தர்மன் : என் தம்பியாகிய சகாதேவனிடத்தில்
  சகாதேவன் : அண்ணா, நான் மீண்டும் கேட்கிறேன் ஓலையை எழுதச் சொன்னது யார்
             தர்மன் : சகுனி
    சகாதேவன்: ஓலையை எழுதி இருப்பது யார் ?
              தர்மன்: துரியோதனன்
    சகாதேவன்: ஓலையில் கையெழுத்து இட்டிருப்பது யார்?
             தர்மன் : திருதிராஷ்டிரர்
    சகாதேவன் : ஓலையை கொண்டு வந்திருப்பது யார்?
               தர்மன்: விதுரர்
     சகாதேவன் : இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் நீர் யார்?
               தர்மன் : (கோபத்துடன்) என்ன சகாதேவா , விளையாடுகிறாயா? ஒரே கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறாய் ,        நானும் மீண்டும் மீண்டும் பதில் கூறிக் கொண்டே இருக்கிறேன் . என்ன இது ?
    சகாதேவன்: இது ஏன் என்றால் , நான் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். அதோ அங்கே நம்மை அழைத்துச் செல்ல நமக்கு முன்பாகவே அந்த ரதத்தில் ஏறி அமர்ந்து தயாராய் இருக்கிறதே விதி , அதுதான் அது ! இப்போது சொல்லிப்பார் , ஓலையை எழுதச் சொன்னது யார்?விதி. ஓலையை எழுதி இருப்பது யார் ?விதி. ஓலையில் கையெழுத்து இட்டிருப்பது யார்?விதி.ஓலையை கொண்டு வந்திருப்பது யார்? விதி.
                                                      இப்படியாக நடக்கவிருக்கும் விதியினை , அதற்க்கான நேரத்தில் விளக்கம் கொடுத்த சகாதேவன் , விதி குறித்து பாரதப் போரின் இறுதியில் இப்படியாக கூறுகிறான் . உலகின் அத்துணை விஷயங்களும் விதியுடன் பிணைக்கப்பட்டவையே.. சரி , தவறு என்ற இரு வேறு கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவான விதிக்கு என்று தனியே சரி தவறு  கிடையாது , அதுவே அதன் விதி. விதி என்பது நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளை தொழுவது போன்றது . துன்பம் வரும்போது மட்டுமே கடவுளைத் தேடும் மனித மனம் , தான் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் பழி சுமக்க மட்டுமே விதியை தேடுகிறது. எல்லாம் அவன் செயல்!

Wednesday, October 6, 2010

சொல்லடி சிவசக்தி, - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசைய்று மனங்கேட்டேன் - நித்தம்
நவமென சுடர்தரும் உயிர்க்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும் - சிவ 
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?