Wednesday, October 13, 2010

குரு

குரு என்பவர் யார் ? கு என்றால் இருள் என்பது பொருள் . ரு என்பது ஒளியை குறிக்கிறது . நம் மனதில் இருக்கும் இருளை நீக்கி ஒளியை தருபவரே  குரு . எந்த ஒரு ஆத்ம ரீதியான விஷயங்களும் ஒரு குருவின் வழிகாட்டுதல் இன்றி முழுமை பெறுவது என்பது , எந்த ஒரு சாதாரணமான மனிதருக்கும் சாத்தியம் இல்லை . ஒரு குருவை தேர்ந்து எடுப்பது என்பது எப்படி? நமக்கு மிகவும் தெரிந்த ஒரு நபரின் குருவை நாமும் குருவாக ஏற்று கொள்வது என்பதோ , நம்மால் முடியாத ஒரு செயலை மற்றொருவர் செய்வதால் அவரையோ , மந்திர தந்திரங்கள் மூலம் நம்மை ஆட்கொள்ளும் நபர்களையோ குருவாக ஏற்று கொள்வது என்பது ஒரு வகையில் தற்கொலைக்கு சமம் என்றே கருதப்படுகிறது.  
நாம் அறியாமலே நம்மை நமக்கு அறிய வைப்பவர் குரு . ஒரு குருவானவர் எல்லாம் தெரிந்த நிலையிலும் தன்னை எளிமையாகவே வைத்துக் கொள்கிறார். உடல் , மனம் இரண்டுக்குமான எல்லா வித சந்தேகங்களுக்கும் ஒரு குருவால் மட்டுமே விளக்கமும் தந்து , அதை உணர வைக்கவும் முடிகிறது . எழுத்துச்சித்தர் பாலகுமாரன் குருவை பற்றிக் கூறும்போது, குரு தன்னை அறிந்தவராக இருக்கிறபொழுது உங்களுடைய தவிப்பை முற்றிலுமாய் உணர்ந்து உங்களை அறியாமல் உங்களை உங்களுக்குள் தள்ளுகின்ற ஆற்றலையும் பெற்றிருப்பார். அந்த ஆற்றல் மிக ரகசியமாய் உங்களில் பாய்ந்து உங்களுக்குள் உங்களை அறிவிக்கும். இது விஞ்ஞான பாடமல்ல. அடிப்படையாய் புரிந்து கொள்வதற்கும், பேசி தெரிந்துகொள்வதற்கும். தடித்த புத்தகங்களிலிருந்து கற்று கொள்வதற்குண்டான விஷயமுமல்ல. இது ரகசியமானது. ரகசியம் என்பதற்கு வேறு ஒருவருக்கு சொல்லக்கூடாது என்ற அர்த்தமில்லை. எப்படி உள்ளே வந்தது என்றே தெரியாத ரகசியம் இது. நீங்கள் எப்படி மாறினீர்கள் என்றே தெரியாத ரகசியம் இது. உங்களை அறியாது உங்களை மாற்றுவது என்பது தன்னை அறிந்த குருவால் வெகு நிச்சயம் இயலும் என்கிறார்.
                                             குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹா குரு சாக்ஷாத் பரம்ப்ர்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா...!

3 comments:

  1. குரு சாட்சாத் பரப்பிரம்மா
    புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
    பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்! http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

    ReplyDelete
  2. Hii, This is Great Post !
    Thanks for sharing with us!!!!


    Digital marketing agency in chennai
    Best SEO Services in Chennai
    seo specialist companies in chennai
    Best seo analytics in chennai
    Expert logo designers of chennai
    Brand makers in chennai

    ReplyDelete